வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்ட தேர்வு: மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 16 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2024-25 கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாதோர் அனைவரையும் 100 சதவீதம் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் விதமாக 2 கட்டங்களாக பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.