வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு

கொச்சி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட கிராமங்கள் மண்ணில் புதையுண்டன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.