விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து
திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் - திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ரயில்கள் பகுதியவில் ரத்து, புறப்படும் இடம் மற்றும் ரயில் நிறுத்தி இயக்கம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.