சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு: ஒரே நாளில் வைகை அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு

நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது

சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு: ஒரே நாளில் வைகை அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு

தேனி: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.

வைகை ஆற்றின் முக்கிய நீர்வரத்து பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது. மேலும், வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, வராகநதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.