“அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்...” - விஜய் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
மதுரை: “திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் திருமண விழா திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த பங்கேற்று, மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியது: "கேப்டன் மதுரைக்கு வந்தால் குழந்தையாக மாறிவிடுவார். அவர் எம்ஜிஆரின் தொண்டர், ரசிகர், விசுவாசி. எங்களது பெற்றோர் இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பர். எம்ஜிஆர் வேறு, கருப்பு எம்ஜிஆர் வேறு அல்ல. 2011-ல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கூட்டணியாக சேர்ந்தனர். சில துரோகிகளின் சூழ்ச்சியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணியை உடைக்க, சில துரோகிகளை உருவாக்கினர்.