வியாசர்பாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 10 வயது சிறுவன் காயம்
சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 10 வயது சிறுவன் காயம் அடைந்துள்ளார்
சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 10 வயது சிறுவன் காயம் அடைந்துள்ளார்.
வியாசர்பாடி கல்யாணபுரம் முதல் தெருவில் வசிப்பவர் நாகப்பன். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக பேட்டரி வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.