ரூ.1.55 கோடி செலவில் முத்துராமலிங்க தேவர் அரங்கம்: காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று (அக்.28) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில்   புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தினை திறந்து வைத்தார். 

ரூ.1.55 கோடி செலவில் முத்துராமலிங்க தேவர் அரங்கம்: காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள .முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.28) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழக அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால், 28.10.2023 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.