“திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இருப்பது குடும்பப் பிரச்சினைதான்” - கே.பாலகிருஷ்ணன்
மதுரையில் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏற்படும் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைதான். எங்களுக்குள் மோதலோ, முரண்பாடோ இல்லை. எதிர்க்கட்சிகள் நினைப்பதுபோல் எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் மார்க்சி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரை: மதுரையில் திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஏற்படும் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைதான். எங்களுக்குள் மோதலோ, முரண்பாடோ இல்லை. எதிர்க்கட்சிகள் நினைப்பதுபோல் எங்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படாது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் மார்க்சி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 24-வது அகில இந்திய மாநாடு 2025 ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை மதுரையில் நடைபெறுவதை முன்னிட்டு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி எம்.பி தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றார்.