வடகிழக்கு பருவமழை - அனைத்து துறை அதிகாரிகள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.