‘குறைகளை சரி செய்த பின் கருத்து கேட்பு கூட்டம்’ - கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வழக்கில் தீர்ப்பு
மாநில வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்த பின்னர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
சென்னை: மாநில வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்த பின்னர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர்கள் ஜேசு ரத்தினம் மற்றும் சரவணன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நாஸ்காம் (NCSCM) உதவியுடன் வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதில் மீனவர்கள் குடியிருப்பு, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம், மீன்கள் பிடிபடும் இடம், மீனவ கிராமங்களின் பெயர்கள், எல்லைகள் விடுபட்டுள்ளன.