மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம்

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம்

சென்னை: மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான மணிக்குமாரின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப்பெறப்பட்டிருக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் நடைபெற்று வரும் திரைமறைவு மோதலின் ஒரு கட்டமாக மனித உரிமை ஆணையத் தலைவருக்கு நெருக்கடி அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.