எங்கு சென்றாலும் கலாச்சாரத்தை மறக்க கூடாது: மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
நம் நாட்டில் எங்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்கக்கூடாது என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நிறுவன நாள் விழாவில் ஆளுநர் ஆர்
சென்னை: நம் நாட்டில் எங்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தை மறக்கக்கூடாது என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நிறுவன நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிறுவன தின விழா நேற்று, ஆளுநர்ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், மத்தியபிரதேசம், அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது: