மின்இணைப்பு பெயர் மாற்றம் உட்பட 25 சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு: மின்சார வாரியம் அறிவிப்பு

மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின்இணைப்பு பெயர்மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் அறிவித்துள்ளது

மின்இணைப்பு பெயர் மாற்றம் உட்பட 25 சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை: மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின்இணைப்பு பெயர்மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் புதிய மின்இணைப்புகளை வழங்கும்போது விண்ணப்பக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமுறை செலுத்தக் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகிறது. மேலும், வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின்பயன்பாட்டுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.