கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத் தொகை: தமிழக அரசு உத்தரவு
2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 2023-2024 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.