‘பதவிக்குப் பொருந்தாத அணுகுமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்’ - முத்தரசன்

இந்தி மொழி வெறியை வெளிப்படுத்தியதை மறைத்து முதல்வர் மீது எதிர் குற்றச்சாட்டை, ஆளுநர் கூறுவது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

‘பதவிக்குப் பொருந்தாத அணுகுமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்’ - முத்தரசன்

சென்னை: இந்தி மொழி வெறியை வெளிப்படுத்தியதை மறைத்து முதல்வர் மீது எதிர் குற்றச்சாட்டை, ஆளுநர் கூறுவது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் நேற்று (18.10.2024) நடந்த ‘இந்தி தினவிழா’வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி தவிர்த்து பாடியதற்கு அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.