‘முதல்வரிடம் முதல் நாள் கோரிக்கை, மறு நாள் அறிவிப்பு...’ - பட்டாசு தொழிலாளர்கள் நெகிழ்ச்சி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலைக்கு நேற்று ஆய்வு சென்ற முதல்வரிடம், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற பட்டாசு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைக்கு, இன்று நடந்த விழாவில் அதற்கென தனி நிதியம் ஏற்படுத்தி, முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பட்டாசு தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலைக்கு நேற்று ஆய்வு சென்ற முதல்வரிடம், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற பட்டாசு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைக்கு, இன்று நடந்த விழாவில் அதற்கென தனி நிதியம் ஏற்படுத்தி, முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பட்டாசு தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதத்திற்கும் மேலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் பட்டாசு தொழில் மூலம் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் மேல் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களாக உள்ளனர்.