தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகில் சென்ற 9 அகதிகள் கைது
தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகில் சென்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஒன்பது அகதிகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகில் சென்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 9 அகதிகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.