“2026-ல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வர வாய்ப்பு” - இந்து முன்னணி மாநிலத் தலைவர் கருத்து

தமிழகத்தில் 2026-ல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய மாற்றம் வரும்போது, சனாதனத்தை பற்றி பேசியவர்கள் யோசனை செய்யக்கூடிய சூழல் உருவாகும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். 

“2026-ல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வர வாய்ப்பு” - இந்து முன்னணி மாநிலத் தலைவர் கருத்து

திருச்சி: “தமிழகத்தில் 2026-ல் மூன்றாவது அணி ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய மாற்றம் வரும்போது, சனாதனத்தை பற்றி பேசியவர்கள் யோசனை செய்யக் கூடிய சூழல் உருவாகும்” என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 4-ம் ஆண்டு நினைவு குருபூஜையையொட்டி திருச்சியை அடுத்த குழுமணி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆத்மஜோதி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி ராமகோபாலன் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அங்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், இந்து முன்னணியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.