26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து: 6 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது
குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவியில் சேர்ந்த 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவியில் சேர்ந்த 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் 3 கட்டங்களாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமும், உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி) தமிழக அரசால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு மூலமும், அடுத்த கட்டமாக மத்திய அரசு (யூபிஎஸ்சி தேர்வு) மூலம் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.