ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் டிச.24 வரை சிறை​யில் அடைப்பு

ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் டிச.24 வரை சிறை​யில் அடைப்பு

சென்னை: ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் அவரது கருத்துகளை முன்வைத்து வீடியோ வெளி​யிடுவதை வழக்​கமாக கொண்​டுள்​ளார். அந்த வகையில் கடந்த வாரம் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டிருந்​தார். அதில், ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.