அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் ஊழியர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்கக்கோரி மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்
மதுரை: அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நியமிக்கக்கோரி மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "மருத்துவ ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 768 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 690 இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளன. ஒரு மாதத்திற்கு சராசரியாக 5807 நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர்.