தெருக்களில் குடியேறும் போராட்டத்தை 15-வது நாளாக தொடர்ந்த மதுரை முல்லை நகர் மக்கள்!
உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் 15-வது நாளாக முல்லைநகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் 15-வது நாளாக முல்லைநகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பீ.பி.குளம் முல்லை நகர், நேதாஜி மெயின் ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு பகுதியில் சுமார் 2,000-க்கும் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி, அவற்றை அகற்ற நீர்வளத் துறை நோட்டீஸ் ஒட்டி முதல்கட்ட நடவடிக்கையை தொடங்கியது. இந்நிலையில், தமிழக அரசை கண்டித்தும், தங்கள் பகுதியை நீர்நிலைப் பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதியான வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும் முல்லை நகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடங்கி நடத்துகின்றனர்.