ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை: திருமாவளவன் விளக்கம்

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை: திருமாவளவன் விளக்கம்

சென்னை: “விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை” என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இடைநீக்கம் குறித்து பொதுவெளியில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து கட்சிக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும் தான் இருந்தது. அந்த விளக்கம் அவருடைய பார்வையில் சரியானதாக இருந்தால் கூட, ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. தனக்கு எல்லாம் தெரிந்தாலும் கூட, பேசுவதெல்லாம் சரிதான் என்றாலும் கூட கட்சியுடன் இணைந்து, கட்சி கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.