செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அளவு அதிகரிப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது
சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடி. இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.