கனமழை எதிரொலி: புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரிப்பு
மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர் வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர்: கனமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர்வரத்து விநாடிக்கு 672 கன அடியாக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை சராசரியாக 3 செ.மீ., பெய்துள்ளது. இம்மழையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 5 ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.