ஜிஎஸ்டி பிரச்சினை: தமிழகம் முழுவதும் டிச.11-ல் ஆர்ப்பாட்டம் - விக்கிரமராஜா தகவல்
வணிகர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிச.11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியுள்ளார்
கோவில்பட்டி: வணிகர்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிசம்பர் 11-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
கோவில்பட்டியில் உள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத்தில், வணிகர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி டிசம்பர் 11ல் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம், 2025-ம் ஆண்டு மே 5-ம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியது: "தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வராதவர்கள். இணக்க வரி செலுத்துபவர்கள் மீதும், கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி திணிப்பு என்பது வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.