ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: வைகோ வரவேற்பு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பானது, கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1-ல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவோடு நானும் இணைந்து மனு தாக்கல் செய்தேன்.