கனமழை காரணமாக அழுகும் பூச்செடிகள் - விவசாயிகள் வேதனை @ தேனி

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வயல்களில் நீர் தேங்கி பூச்செடிகள் அழுகிவிட்டன. மேலும், மழையின் தாக்கத்தால் பூக்களிலும் கருகல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைந்து பறிப்புக் கூலி கூட கொடுக்க இயலாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

கனமழை காரணமாக அழுகும் பூச்செடிகள் - விவசாயிகள் வேதனை @ தேனி

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வயல்களில் நீர் தேங்கி பூச்செடிகள் அழுகிவிட்டன. மேலும், மழையின் தாக்கத்தால் பூக்களிலும் கருகல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைந்து பறிப்புக் கூலி கூட கொடுக்க இயலாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, புள்ளிமான்கோம்பை, தெப்பம்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி, கொத்தபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோழிக்கொண்டை, செண்டு பூ, மல்லிகை, துளசி, சம்பங்கி, பட்டன்ரோஸ், பன்னீர்ரோஸ், ரோஜா உள்ளிட்ட பூக்கள் இந்தப் பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் பலன் தருவதால் பல விவசாயிகள் பூ விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.