சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பாத தொழிலாளர்களால் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் சிறிது தொய்வு

சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பாததால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது

சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பாத தொழிலாளர்களால் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் சிறிது தொய்வு

சென்னை: சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பாததால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 116.1 கி.மீ. தொலைவுக்கு ரூ.63,246 கோடியில் நடைபெற்று வருகின்றன. அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.