“ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக விஜய் பேசியது அறிவிலித்தனம்” - ஹெச்.ராஜா
"ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக விஜய் பேசியது அறிவிலித்தனம்" என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்தார்.
காரைக்குடி: "ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக விஜய் பேசியது அறிவிலித்தனம்" என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று மாலை பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "ஆளுநர் தேவையில்லை என்று கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்.