அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு: உயர் கல்வி அமைச்சர் புறக்கணிப்பு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழக 35-வது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். துணைவேந்தர் க.ரவி வரவேற்றார். திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பவன்குமார் சிங் பேசினார். தொடர்ந்து 3 பேருக்கு அறிவியல் அறிஞர் பட்டம், 93 பேருக்கு முனைவர் பட்டம், பல்கலை. அளவில் தரம் மற்றும் தங்கம் பதக்கம் பெற்ற 181 பேர் என 277 பேருக்கு நேரடியாக பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.