தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம்: ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்களுடன் அதிமுகவினர் வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பினர்.

தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம்: ப்ளீச்சிங் பவுடர் பாக்கெட்களுடன் அதிமுகவினர் வெளிநடப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பினர்.

குறிப்பாக, தாம்பரத்தில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்கும் பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதனால் அனகாபுத்தூர் போன்று தாம்பரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒப்பந்ததாரர் மூலம் திட்டத்தை முடிக்க வேண்டும்.