நெய்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கைது

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்னையை நோக்கி புறப்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை போலீஸார் கைது செய்து தனியார் மண்பத்தில் தங்க வைத்துள்ளனர்.

நெய்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கைது

கடலூர்: முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்னையை நோக்கி புறப்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை போலீஸார் கைது செய்து தனியார் மண்பத்தில் தங்க வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பலர் என்எல்சி நிறுவனத்துக்காக வீடு, நிலங்களை கொடுத்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் என்எல்சி நிறுவனம் இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. வாரிசு அடிப்படையிலும் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும், கரோனா காலகட்டத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கும் தற்பொழுது வரை பணி வழங்கவில்லை. 20 சதவீத போனஸ் வழங்கப்படவில்லை.