தமிழக மீனவர்கள் 16 பேருக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களுக்கு நவம்பர் 20 வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற மகேந்திரன், ராமர்பாண்டி என்பவர்களுக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது, கடந்த அக்டோபர் 22-ல் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர்.