கோவை அவினாசி சாலை.. டிக் அடிக்கப்பட்ட 5 பகுதிகள்.. வரும் பிரம்மாண்ட பிளான்.. அடடே செம
கோவையின் வரும் பிரம்மாண்ட பிளான்.. அடடே செம
கோவை: கோவையின் மிக முக்கிய சாலையான அவினாசி சாலையில் அதிகரிக்கும் டிராபிக் நெரிசலைக் கருத்தில் கொண்டு அங்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாலத்திற்குக் கீழே பொதுமக்கள் அவினாசி சாலையில் 5 இடங்களில் முக்கிய மாற்றம் வரப் போகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கோவை மேஜர் மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது. கோவை நகரில் மிக முக்கிய சாலையாக இருப்பது அவினாசி சாலை.. கோவை மக்கள் வெளியூர் செல்ல இந்த சாலை மிக முக்கியமானது. மேலும், பல முக்கிய நிறுவனங்களும் இதில் தான் செயல்பட்டு வருகிறது.
கோவை மேம்பாலம்: இதனால் இந்த அவினாசி சாலையில் எப்போதும் டிராபிக் நெரிசல் அதிகமாகவே இருக்கும்.. குறிப்பாக லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு பகுதிகளைக் காலை மற்றும் மாலை நேரங்களில் தாண்டவே அதிக நேரம் ஆகும். இதற்கிடையே இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கு அவினாசி சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த 10.1 கிலோமீட்டர் தூர அவினாசி மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பாக மற்றும் எளிதாகச் சாலையைக் கடக்க ஏதுவாக லிஃப்ட் வசதியுடன் கூடிய ஐந்து பாலங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. முதலில் எஸ்கலேட்டர்கள் உடன் இந்த பாலங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அதற்கு ஓவர் செலவாகும் என்பதால் எஸ்கலேட்டர்களுக்கு பதிலாக லிஃப்ட் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.