தமிழகத்தில் நிலுவையில் உள்ள 30,000 விவசாய மின் இணைப்புகளை அடுத்த மார்ச்சுக்குள் வழங்க அனுமதி
கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை: கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் தமிழக மின்வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது. இதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் விநியோகம் ஆகிய அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும்.