மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு: தாம்பரத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டனர்.
தாம்பரம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதில் ஈசா பல்லாவரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம், இரும்புலியூர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள், தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்டவைகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.