ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல்: இசைவாணி மீது மதுரை போலீஸில் பாஜகவினர் புகார்
ஐயப்ப சுவாமிக்கு குறித்து அவதூறு பாடல் பாடியதாக சென்னை கானா பாடகி இசைவாணி மீது மதுரை காவல் துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை: ஐயப்ப சுவாமிக்கு குறித்து அவதூறு பாடல் பாடியதாக சென்னை கானா பாடகி இசைவாணி மீது மதுரை காவல் துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
பாஜக மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் உள்ளிட்ட அக்கட்சியினர் கானா பாடகி இசைவாணிக்கு எதிராக காவல் ஆணையர் லோகநாதனிடம் இன்று புகார் கொடுத்தனர். அந்த புகாரில், 'இந்து மக்களின் கடவுளாகிய சபரிமலை ஐயப்பனை இழிவாக பாடல்களை பாடிய சினிமா இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என வலியுறுத்தியுள்ளனர்.