தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம்

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காட்டுமிராண்டித்தனமான இச்செயலை செய்தவருக்கு கடும் தண்டனையை தமிழக அரசு வழங்கிட வேண்டும். இந்த கொடூரமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணத் தொகை அளிக்க வேண்டும்