புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 15-ம் தேதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்

மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவுகிறது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து, தென்தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.