சேவை பெறும் உரிமைச் சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் திசம்பர் 9 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வழங்கியிருக்கிறார். மக்களுக்கு குறித்த காலத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற அவரது நோக்கம் வரவேற்கத்தக்கது. அதற்கான அவரது அணுகுமுறை தான் பயனளிக்காதது ஆகும்.