ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர்.
ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) கடலுக்குச் சென்றனர்.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் அதிகப்பட்சமாக 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டது.