திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி!

திருவள்ளுவர் சிலை அமைந்து 25வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் இணைப்புப் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்காக கன்னியாகுமரியின் சுற்றுலா மைய பகுதிகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி!

நாகர்கோவில்: திருவள்ளுவர் சிலை அமைந்து 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் இணைப்புப் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்காக கன்னியாகுமரியின் சுற்றுலா மைய பகுதிகள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.

கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இணை கூண்டு இணைப்பு பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பாலம் வருகிற ஜனவரி 1-ம் தேதி திறக்கப்படுகிறது. இதைப்போல் திருவள்ளுவர் சிலை அமைத்து 25-வது ஆண்டு நிறைவு வெள்ளி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாக்கள் வருகிற டிசம்பர் 31-ம் தேதியும், ஜனவரி 1-ம் தேதியும் நடைபெறுகிறது.