பெரம்பலூர் உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்: அரசாணை வெளியீடு
பெரம்பலூர் , வாணியம்பாடி மற்றும் அணைக்கட்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.23.75 கோடி வீதம் மொத்தம் ரூ.71.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்க, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னை: பெரம்பலூர் , வாணியம்பாடி மற்றும் அணைக்கட்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.23.75 கோடி வீதம் மொத்தம் ரூ.71.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்க, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு, மாநிலம் முழுவதும் அவசரகால மற்றும் நோய் கண்டறியும் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார உட்கட்டமைப்புகளை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டு முதல், தமிழக அரசு 28 தீவிர சிகிச்சை பிரிவுகளும் (CCBs), 20 மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் (DIPHLs) நிறுவுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டங்கள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன.