எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன்: சீமான்
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்கவுள்ளார்.
சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்கவுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் நிலக்கரி அனல் மின் நிலையத்துக்காக 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனல் மின் நிலைய விரிவாக்கத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் வரும் டிச.20-ம் தேதி எர்ணாவூரில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.