“அண்ணாமலை வந்தால்தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ?” - எஸ்.ஆர்.சேகர்

அண்ணாமலை வந்தால் தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ என, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

“அண்ணாமலை வந்தால்தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ?” - எஸ்.ஆர்.சேகர்

கோவை: அண்ணாமலை வந்தால் தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (டிச.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசியது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. நாளுக்கு நாள் மோசமாகி வரும் சட்டம் ஒழுங்கு, அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து கவலை கொள்ளாமல் இருந்த முதல்வரும், உட்க்கட்சியிலேயே பல எதிர்க்கட்சிகளை சமாளிப்பதையே முழு நேரப் பணியாக மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும், மக்களுக்காக களத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகைக்குப் பிறகு, வேறு வழியில்லாமல் உண்மையிலேயே மக்கள் பிரச்சினையைப் பற்றி பேச துவங்கியிருப்பது மகிழ்ச்சி.