புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கு​கிறோம்: கர்னாடக இசை கலைஞர் நித்​யஸ்ரீ மகாதேவன் பெரு​மிதம்

இருட்டை விமர்​சித்​துக் கொண்​டிருப்​ப​தை​விட, ஒரு மெழுகு​வத்​தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்​பட்ட ஒரு செயலைத்​தான் சென்னை, மயிலாப்​பூர் ஃபைன் ஆர்ட்​ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்​களின் கூட்​டமைப்பு முன்னெடுத்​தது.

புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கு​கிறோம்: கர்னாடக இசை கலைஞர் நித்​யஸ்ரீ மகாதேவன் பெரு​மிதம்

சென்னை: இருட்டை விமர்​சித்​துக் கொண்​டிருப்​ப​தை​விட, ஒரு மெழுகு​வத்​தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்​பட்ட ஒரு செயலைத்​தான் சென்னை, மயிலாப்​பூர் ஃபைன் ஆர்ட்​ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்​களின் கூட்​டமைப்பு முன்னெடுத்​தது.

டிசம்பர் மாதத்​தில் எண்ணற்ற சபாக்​களால் நடத்​தப்​படும் ஆயிரக்​கணக்கான மார்கழி இசை, நாட்டிய திரு​விழாக்​களின் சிறப்​புக்காக இந்தியா​வின் கலாச்சார தலைநகராக சென்னை மாநகரம் கொண்​டாடப்​பட்​டாலும், சபாக்​களில் ரசிகர்​களின் கூட்டம் குறைந்​து​கொண்டே வருகிறது.