செம்பரம்பாக்கம் ஏரி Vs சாத்தனூர் அணை திறப்பு: பேரவையில் ஸ்டாலின் - இபிஎஸ் காரசார விவாதம்

செம்பரம்பாக்கம் ஏரி, சாத்தனூர் அணை திறந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

செம்பரம்பாக்கம் ஏரி Vs சாத்தனூர் அணை திறப்பு: பேரவையில் ஸ்டாலின் - இபிஎஸ் காரசார விவாதம்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி, சாத்தனூர் அணை திறந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து பி.தங்கமணி பேசும்போது, “மத்திய நிதியமைச்சர், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறோம் என்றும், தமிழகத்தில் அமைச்சர் தவறான தகவலை சொல்வதாகவும் கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மையா? நீங்கள் கூறுவது உண்மையா?