விஸ்வகர்மா திட்டம்: உதயநிதி பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்    

கிறிஸ்தவர்கள், விஸ்வகர்மா திட்டம் குறித்த துணை முதல்வர் உதயநிதியின் பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

விஸ்வகர்மா திட்டம்: உதயநிதி பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்    

சென்னை: கிறிஸ்தவர்கள், விஸ்வகர்மா திட்டம் குறித்த துணை முதல்வர் உதயநிதியின் பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் விடுத்த அறிக்கையில், “அண்மையில் சென்னை சேத்துப்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, கிறிஸ்தவர்கள் பங்களிப்பால்தான் சமூக நீதி தமிழகத்தில் வாழ்கிறது என்றும், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றி குலக்கல்வியை ஏற்படுத்த மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய், புரட்டு மற்றும் அநாகரிகமான பேச்சு. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.