வேளாங்கண்ணி - சென்னை விரைவு ரயில்: நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தல்
வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார்.
சென்னை: வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இந்திய ரயில்வே துறை மிகப் பெரிய அளவில் சேவையாற்றும் ஒரு பொதுத் துறையாகும். தினசரி செய்தித்தாள்களில் எதிரே வந்த ரயிலுடன் மோதல், மொழி பிரச்சினையால் பயணிகளுக்கும் ரயில்வே ஊழியருக்கும் மோதல் என பல செய்திகள் வருகின்றன. இதை படிக்கும்போது, அச்சம் ஏற்படுகிறது. காலத்துக்கு ஏற்ப ரயில்வே தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது.